சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள Nature’s Care and Social Welfare Society என்ற சமூக சேவை நிறுவனம், விதவைக்கு மறுவாழ்வு அளித்தால் வெளிநாட்டு தேனிலவு சுற்றுலா இலவசமாக வழங்கும் அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.
சட்டிஸ்கர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வரும் தனியார் நிறுவனமான Nature’s Care and Social Welfare Society என்ற அமைப்பு நேற்று சிறப்புக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் உயர்ந்த மனம் கொண்டவருக்கு வீடு, வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் தேனிலவு சுற்றுலாவுக்கு இலவச டிக்கெட் ஆகியவைகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் இயக்குனர் டாக்டர் வினிதா பாண்டே, இந்த அறிவிப்பை நேற்று அறிவித்ததோடு, மேடையில் விதவைக்கு மறுவாழ்வு கொடுத்த ஒருவருக்கு தேனிலவு டிக்கெட்டையும் கொடுத்து அனைவரையும் அசத்தினார். ஆசியாவில் உள்ள எந்த நாட்டுக்கும் 3 இரவு 4 பகல் கொண்ட சுற்றுலா ஏற்பாடு செய்து தரப்படும். ஸ்டார் ஹோட்டல்களில் தங்கும் வசதி, சாப்பாடு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் இலவசமாக கிடைக்கும் என அறிவித்துள்ளது.