தேவையான பொருட்கள்
- சிக்கன்- அரை கிலோ
- கருவேப்பிலை -2 கொத்து
- வர மிளகாய் – 5.
- மிளகு -1 ஸ்பூன்
- கடலை பருப்பு -1 ஸ்பூன்
- இஞ்சி -சிறிது அளவு.
- பூண்டு – சிறிது அளவு.
- உப்பு -தேவையான அளவு.
- எண்ணெய் -தேவையான அளவு.
- கொத்தமல்லி தூள் -1 ஸ்பூன்.
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சொட்டு விட்டு வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு,கருவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும். வருத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த கலவையில் கொத்தமல்லி தூள்,சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் மசாலைவை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.(விரும்பினால் பொரிக்கும் போது சிறிது அளவு கருவேப்பிலை போட்டு பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும் ).