சிக்கன் பெப்பர் மஸ்கா

3_2548489f

என்னென்ன தேவை?

கோழிக்கறி – கால் கிலோ

பட்டை கிராம்பு, சீரகம் – சிறிதளவு

வெங்காயம் – 2

தனியாத் தூள், தனி மிளாகாய்த் தூள் – தலா ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள், தயிர் – தலா 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 5 சொட்டு

கொத்தமல்லி – சிறிதளவு

இஞ்சி சாறு – 5 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோழிக்கறியை குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சீரகம் போட்டு வதக்குங்கள். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த் துாள், தனியாத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். வேகவைத்த கோழிக்கறியைச் சேர்த்து இஞ்சி சாற்றை ஊற்றுங்கள்.

தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரை ஊற்றி, கூட்டு போல் வந்ததும் எலுமிச்சை சாற்றைச் சேருங்கள். மிளகுத் தூளைத் துாவி, நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து இறக்கிவையுங்கள். இந்த சிக்கன் பெப்பர் மஸ்கா, நாவுக்குச் சுவை தருவதுடன் ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தர வல்லது.

Leave a Reply