சிக்கன் ரசம்

93511f00-a8b3-449f-ba60-198782035aea_S_secvpf

தேவையான பொருட்கள்:

நன்கு சுத்தம் செய்யப்பட்ட கோழி எலும்புடன் – 1/4 கி(தோல் நீக்கியது)
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
தனி மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
தக்காளி – 1
வெங்காயம் – 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
தண்ணீர் – 4 டம்ளர்
கொத்தமல்லி தழை – சிறிதளவு

ரசப் பொடி செய்ய :

மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
பூண்டு – 2

தாளிக்க :

கடுகு,
உளுத்தம் பருப்பு,
வரமிளகாய் – 1,
கறிவேப்பிலை

செய்முறை:

* ரசப்பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் கோழியைப் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், தக்காளி, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு போட்டு வேக வைக்கவும்.

* இருப்புச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்1, கறிவேப்பிலை போட்டு தாளித்து, குக்கரில் உள்ள கோழிச்சாறை ஊற்றி, 1 டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து ஊற்றி, நுணுக்கி வைத்திருக்கும் ரசப்பொடியை அதில் போட்டு, ரசம் நுரைத்துக்கொண்டு வரும் பொழுது கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிட வேண்டும்.

* இந்த ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம், அல்லது அப்படியேயும் குடிக்கலாம்.

Leave a Reply