டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கியுள்ள நிபந்தனையற்ற ஆதரவு குறித்து காங்கிரஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்கள் வெளியில் இருந்து ஆதரவு தருகின்றனர். சமீபகாலமாக ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியுடனும், மத்திய அரசுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எதிராக முதல்வரே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதுகுறித்து நேற்று பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘அனுபவம் இல்லாத ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தது தவறு என்றும், அந்த ஆதரவை கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கைகளால் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், அதன் எதிரொலிதான் ப.சிதம்பரத்தின் பேட்டி என்றும் கூறப்படுகிறது.
கூடியவிரைவில் டெல்லியில் ஆம் ஆத்மியின் அரசு கவிழக்கூடிய வாய்ப்பு இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.