சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், கொடி மரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சிதம்பரம், நடராஜர் கோவிலில், 28 ஆண்டுகளுக்குப் பின், கும்பாபிஷேக விழா, வரும், 1ம் தேதி நடக்கிறது. இதற்காக, யாகசாலை அமைத்து, பூர்வாங்க பூஜை நேற்று துவங்கியது. முன்னதாக, நடராஜர் சன்னிதி எதிரில் உள்ள கொடி மரத்துக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடாகி, காலை, 9:00 மணிக்கு, கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து, நடராஜர் சபையின் நான்கு பக்கமும், எட்டு திக்குகளில் உள்ள பாலகருக்கு புண்ணிய நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது.