சிதம்பரம் கோவில் கும்பாபிஷேகம். கோடிக்கணக்கில் கொள்ளை அடித்ததாக தீட்சதர்கள் மீது புகார்?

chidambaramஉலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில்  28 வருடத்திற்கு பிறகு நேற்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய வந்திருந்தனர். சிதம்பரம் கோவிலில் கருவறையில் உள்ள நடராஜருக்கு அதிகாலையில் பூஜைகள் செய்யப்பட்டு, கீழ வீதி, மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி கோபுரங்களில் உள்ள விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஐகோர்ட் நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி, திருவாடுதுறை ஆதினம், காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நடராஜர் சிலைக்கு காணிக்கையாக தீட்சிதர் ஒருவர் அரை கிலோ தங்கத்தில் மாலை சாத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கும்பாபிஷேகத்தை காண வி.ஐ.பி சிறப்பு பாஸ் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இந்த வி.ஐ.பி. பஸ்களை கோவிலின் திட்சதர்கள் வெளியில் விற்று கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளதாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் வெளிமாநிலங்களில் வாழும் பக்தர்களை சந்தித்து கோவில் குடமுழுக்கு விழாவிற்காக கோடிக்கணக்கில் விதிமுறைகளுக்கு மாறாக நிதி வசூல்செய்ததாகவும் தீட்சதர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து சம்மந்தப்பட்ட தீட்சதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply