பிரதமர் முன்னிலையில் கண்கலங்கிய தலைமை நீதிபதி. அதிர்ச்சி வீடியோ

பிரதமர் முன்னிலையில் கண்கலங்கிய தலைமை நீதிபதி. அதிர்ச்சி வீடியோ

judgeபாரத பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கண்கலங்கி கண்ணீர் விட்டதால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் நேற்று முதல் அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ர தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் உரையாற்றியபோது நீதிமன்றங்களில் தேங்கியுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர போதுமான நீதிபதிகளை அரசுகள் நியமிக்காததை கண்கலங்கியவாறு எடுத்துரைத்தார்.

பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கண்கலங்கிய நிலையில், நா தழுதழுக்க உரையாற்றிய தலைமை நீதிபதியை பார்த்து விழா மேடையில் இருந்தவர்களும் கண்கலங்கினர்.

இந்த விழாவில்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் பேசியவதாவது:

10 லட்சம் பேருக்கு 10 நீதிபதிகள் என்று இருந்த விகிதத்தை 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என மாற்றியமைக்க கடந்த 1987ஆம் ஆண்டில் சட்டக்குழு பரிந்துரை செய்தது. ஆனால் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் விஷயத்தில் அரசுகள் செயலற்ற தன்மையிலேயே இருக்கின்றன. இன்றைய நிலையில் 10 லட்சம் பேருக்கு வெறும் 15 நீதிபதிகள் என்ற விகிதத்தில் மட்டுமே இருக்கின்றது. இது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளை விட மிகவும் குறைவு. 1987ஆம் ஆண்டிலேயே நீதிபதிகளின் தேவை 40 ஆயிரமாக இருந்தது. அதற்குப்பின்னர் 25 கோடிக்கு மேல் மக்கள் தொகையும் அதிகரித்து விட்டது. ஆனால் இன்று நீதிபதிகளின் எண்ணிக்கை 21 ஆயிரம் மட்டுமே உள்ளது.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக பல மாநாடுகளில் பேசி,  பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என மாநில அரசுகள் கூறுகின்றன. இந்த நீயா? நானா? போட்டி எங்கு செல்கிறது? கோர்ட்டுகளில் 38 லட்சம் வழக்குகள் இன்னும் தேங்கி கிடக்கின்றன.
 
இது வெறும் வழக்குகளோ அல்லது மக்கள் சிறைகளில் இருப்பது தொடர்பானதோ அல்ல. மாறாக நாட்டின் வளர்ச்சியிலும் தொடர்புடையது. எனவே நீதிபதிகளின் எண்ணிக்கையை 40 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

Chennai Today News: Chief Justice of India TS Thakur breaks down during his speech at Jt conference of CMs and CJ of HCs in Delhi

Leave a Reply