ஒன்றரை வருடத்திற்கு பின் மீண்டும் கொடநாடு சென்ற ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு.
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று நீலகிரி மாவட்டம் கோடநாடு சென்றார். அங்கு அவருக்கு அதிமுகவினர் மலர்தூவி நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலமாக சென்ற ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோடநாடுக்கு பகல் 1 மணியளவில் சென்றடைந்தார். ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் ஜெயலலிதா கோடநாடு வந்திருப்பதால், நீலகிரி மாவட்ட அதிமுகவினர் உற்சாகமடைந்து அலங்கார தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், ஆடல், பாடல் என முதல்வரை அமர்க்களமாக வரவேற்றனர்.
நீலகிரி மாவட்டச் செயலாளரும், கே.ஆர்.அர்ஜுணன், எம்.பிக்கள் சி.கோபாலகிருஷ்ணன், ஏ.கே.செல்வராஜ், எம்எல்ஏக்கள் புத்தி சந்திரன், கருப்புசாமி, மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், மேற்கு மண்டல ஐ.ஜி. சங்கர், டி.ஐ.ஜி. அமீத்குமார் உள்ளிட்டோர் மலர்க்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்தபடியே சில வாரங்கள் அரசுப் பணிகளை மேற்கொள்வார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது