பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவருமான சுப்பிரமணிய சுவாமி அஸ்ஸாம் மாநிலத்திற்குள் நுழைய தடை விதிப்போம் என அம்மாநில முதலமைச்சர் தருண் கோகாய் எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் அஸ்ஸாம் மாநில பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த விழாவில் கலந்து கொண்ட சுப்பிரமணியம் சுவாமி, ஒரு குறிப்பிட்ட சமுகத்தினர் குறித்த சர்ச்சரிக்குரிய கருத்தை பேசியதாக தெரியவந்துள்ளது. இதனால் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக பல்வேறு மத அமைப்புகளிடம் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி மீது சத்ரா முக்தி சங்கிராம் சமிதி என்ற அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து கூறிய முதல்வர் தருண் கோகாய், தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களை சுப்பிரமணியசுவாமி பேசி வந்தால், அவர் எங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை விதிப்போம்.
சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தபோதிலும் அவர் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.