சென்னை போரூர் அருகே உள்ள முகலிவாகத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தின் மீட்புப் பணிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் இந்த விபத்தில்
காயமடைந்து சிகிச்சை பெற்றும் வரும் தொழிலாளர்களை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
சென்னை அருகே தனியாருக்குச் சொந்தமான 11 மாடி கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. தரைமட்டமான இந்த கட்டட இடிபாடுகளுக்குள் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக இரவு பகல் பாராது மீட்புப்பணிகள் 24 மணிநேரமும் தொடர்ந்து நடைபெறுகிறது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1lH56NO” standard=”http://www.youtube.com/v/Jv1jeqa_C3E?fs=1″ vars=”ytid=Jv1jeqa_C3E&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep7147″ /]
கொட்டும் மழையிலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், மற்றும் தீயணைப்புப் படையினர், காவல் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர். ராட்சதகிரேன், பொக்லைன், மோப்பநாய்கள் மூலம், நவீன டிஜிட்டல் கேமரா ஆகியவற்றின் உதவியுடன் மீட்புப்பணிகள் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டட விபத்து நடந்த இடத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை நேஇல் பார்வையிட சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அங்குள்ள உயரதிகாரிகளிடம் மீட்பு நடவடிக்கைகள் விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அதிகாரிகளுக்கு ஒருசில ஆலோசனைகளை வழங்கிய முதல்வர் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இவ்விபத்துக்கு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் வதந்திதான். அவை விஷமத்தனமானவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை.
விபத்துக்குள்ளான அடுக்குமாடி கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. திட்ட அனுமதி வழங்கியதில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால், கட்டுமான நிறுவனம்தான் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. எந்தவிதமான விதிமீறல், அது எப்படி நடந்தது என்பதை தற்போது சொல்ல முடியாது. சரிந்து விழுந்த கட்டடம் மற்றும் அதன் அருகில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டடம் ஆகியவை கட்டப்பட்ட இடத்தின் மண்ணின் தரம் ஆகியவை ஆய்வு செய்யப்படும் என்றார்.
இந்த விபத்தில் காயமடைந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலையையும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.