முதல்வருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி திடீர் சந்திப்பு

முதல்வருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி திடீர் சந்திப்பு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன்னர் தனது இல்லத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது

சசிகலா முதல்வராக பதவியேற்கவுள்ளதாக ஒரு சூழ்நிலை ஏற்பட்டவுடன் ஷீலா பாலகிருஷ்ணன், சாந்தஷீலா நாயர் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இன்னும் பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் சற்று முன்னர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply