தேவையான பொருட்கள் :
சிக்கன்
குடை மிளகாய்
சோம்பு
கறிவேப்பிலை
வெங்காயம் – நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
உப்பு
ப.மிளகாய் – 6 முதல் 10
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – 1
இஞ்சி – பொடியாக நறுக்கியது சிறிது
செய்முறை :
* கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
* குடைமிளகாய், ப.மிளகாய் போட்டு சிறிது வதக்கி சிக்கன், உப்பு போட்டு வதக்கவும்.
* சிக்கன் வேக சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
* கலர் மாறி சிக்கன் வெந்ததும் தனியா தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்ததாக பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி போட்டு கிளரவும்.
* பிறகு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.