சீன பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி. கரடியின் பிடியில் இந்திய பங்குச்சந்தை

சீன பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி. கரடியின் பிடியில் இந்திய பங்குச்சந்தை

shareசீன பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளதால் பங்குவர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே பங்குச்சந்தை உலகம் முழுவதும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் வழக்கம்போல் இன்று காலை தொடங்கிய சீன பங்குச்சந்தைகளில் அதன் பங்குகள் 7 சதவீதத்திற்கும் கீழ் பெருமளவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக சீன பங்குச்சந்தையில் வர்த்தகம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஷாங்காய் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 1.88 சதவீதம் குறைந்து 11,504.9 புள்ளிகளாக இருந்ததாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன பங்குச்சந்தையின் சரிவு இந்திய பங்குச்சந்தையையும் பாதித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை  பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிந்து 24,912ஆக இருந்தது. நிப்டி 157 புள்ளிகள் சரிந்து 7585ஆக இருந்தது.

தொடர்ந்து பங்குச்சந்தை சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்து வருகின்றனர். இதேபோல் கமாடிட்டி பங்குச்சந்தையில் கச்சாஎண்ணெயின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏறிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply