ஹாங்காங்கில் இங்கிலாந்து ஆய்வுக்குழு நுழைய தடை. சீனா அதிரடியால் பரபரப்பு

hong kong clashஇங்கிலாந்து நாட்டு எம்.பி.க்கள் ஹாங்காங்கில் நுழைவதற்கு சீனா திடீர் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஒருபகுதியாக இருக்கும் ஹாங்காங் தீவை 1898ஆம் ஆண்டு இங்கிலாந்து 99 வருட குத்தகைக்கு எடுத்தது. இந்த குத்தகை காலம் கடந்த 1997ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதன்பின்னர் ஹாங்காங்கை, மீண்டும் சீனாவிடம் இங்கிலாந்து ஒப்படைத்தது.

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு ஹாங்காங்கில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சீனாவின் ஆதரவு பெற்ற தலைவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த அறிவிப்பை எதிர்த்து மாணவர், தொழிலாளர், ஜனநாயக அமைப்புகள் கடந்த சில மாதங்களாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன்.

இந்நிலையில் தாங்கள், சீனாவிடம் ஹாங்காங்கை ஒப்படைத்த பின்னர் அங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய இங்கிலாந்து அரசு ரிச்சர்டு ஒட்டாவே தலைமையில் எம்.பி.க்கள் குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எங்களுடைய முழு கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் நுழைந்து ஆய்வு செய்ய இங்கிலாந்துக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கூறியதோடு, இங்கிலாந்து ஆய்வுக்குழுவினர் ஹாங்காங்கில் நுழைய தடை விதித்து உள்ளது.

இதனிடையே சீனா தடை விதித்ததை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் நேற்று கடுமையாக மோதியுள்ளனர்.

Leave a Reply