விண்டோஸ் 8 ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்த சீனா தடை.

windows8சீனாவில் பெரும்பாலான கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்கள் விண்டோஸ் எக்ஸ்பியை பயன்படுத்தி வந்தார்கள். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பியை கடந்த ஜனவரி மாதத்துடன் நிறுத்திக்கொள்வதாக அறிவித்ததால், சீனர்கள் விண்டோஸ் 8 ஆபரேட்டிங் சிஸ்டத்தை  பயன்படுத்த தொடங்கினர். ஆனால் தற்போது சீன அரசு விண்டோஸ் 8 ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது. எனவே சீன மக்கள் எந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.,

மின்சார சேமிப்பு காரணமாக விண்டோஸ் 8ஐ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு கூறிய காரணங்களை சீன மக்கள் நம்பவில்லை. அமெரிக்காவுக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் நெருக்கடி கொடுக்கவேண்டும் என்று கருதியே மைக்ரோசாப்டின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை சீன அரசு தடை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் சீனாவில் காலூன்றுவதை சீன அரசு விரும்பவில்லை என்பதால்தான் இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சீனாவில் பெரும்பாலும் போலியான மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்தை தங்களது பயன்படுத்தி வருகிறார்கள் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply