ரயில் பாதையால் சீன பெருஞ்சுவருக்கு பாதிப்பா?

ரயில் பாதையால் சீன பெருஞ்சுவருக்கு பாதிப்பா?

சீனாவில் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவருக்கு அடியில் சுமார் 12 கிமீ அதிவேக ரயில் செல்லும் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதால் சீனப்பெருஞ்சுவருக்கு பாதிப்பு ஏற்படும் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் பீஜிங் மற்றும் ஷாங்ஜியாகோ நகரங்களை இணைக்கும் வகையில் 174 கி.மீ. நீளத்திற்கு அதிவேக ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியானது, புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்க ரெயில் பாதையாக அமைய உள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2019ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படாலிங் பகுதியில் பெருஞ்சுவருக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், படாலிங் பெருஞ்சுவர் மேற்பரப்பில் இருந்து 102 மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அதிக ஆழமான இடத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

ஆனால் சீனப் பெருஞ்சுவர் அருகில் சுரங்கப் பாதை அமைக்கப்படுவதால் அதற்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

Leave a Reply