கையில் இருக்கும் போனை பார்த்துக்கொண்டே நடப்பதும், காரோட்டுவதும் நவீன கால பிரச்சினைகள். இந்த பிரச்சினைக்கு சீனாவில் புதிய வழி கண்டுபடித்துள்ளனர். அதுதான் ஸ்மார்ட்போன் நடைபாதை.
ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே நடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்காக, சீனாவின் சாங்கியிங் (Chongqing ) நகரில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பகுதியின் நடைபாதையில் இதற்கு இடம் ஒதுக்கியுள்ளனர். இந்த பாதையில் ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே நடப்பவர்களுக்காக 50 மீட்டர் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அருகே உள்ள 50 மீட்டரில் செல்போன் பயன்படுத்தக்கூடாது. புதுமையான இந்த யோசனையில், செல்போனை பார்த்து கொண்டே நடப்பதில் உள்ள ஆபத்துகளைப் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் நேஷனல் ஜியாகிரஃபிக் தொலைக்காட்சி சார்பாக, அமெரிக்காவில் பின்பற்றப்பட்ட யோசனையால் இந்த திட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.