சீனா அறிமுகப்படுத்திய அதிநவீன கப்பல்! இந்தியாவுக்கு மறைமுக அச்சுறுத்தலா?
சீன அரசு அவ்வப்போது அதிநவீன ஆயுதங்களை குவித்து வருவதால் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அச்சம் அடைந்திருக்கும் நிலையில் தற்போது அந்நாடு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ‘055 டெஸ்ட்ராயர்’ என்ற போர் கப்பலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வகை கப்பல் இதுவரை எந்த ஆசிய நாடுகளிடம் இல்லை. லேட்டஸ்ட் தொழில்நுட்பத்திலும், அதிநவீன வசதிகள், தொழில்நுட்பங்களும் உள்ள இந்த போர் கப்பலை அறிமுகப்படுத்தி வைத்துள்ள சீன அரசு, “சீனாவின் கப்பல் படையின் முழு மேம்பாட்டையும் இந்த போர்கப்பலில் காண முடியும் என்றும் இதுவரை இல்லாத அளவிற்கு அதீத தொழில்நுட்பம், ஏவுகணைகள், கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் இதில் உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த கப்பலின் மொத்த எடை 10,000 டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிநவீன கப்பலால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை விடுவதாகவே கருதப்படுகிறது.