அருணாச்சலப்பிரதேசம் தனி மாநிலமாக உருவானதன் 28 ஆம் ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி அருணாச்சலம் மாநிலத்துக்கு சென்றார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணத்திற்கு எதிரான தனது எதிர்பை சீனா அதிகாரப்பூர்வமாக புகார் செய்திருக்கிறது
இந்திய பிரதமரின் அருணாச்சலப் பிரதேச வருகையானது சீனாவின் எல்லையை மதிக்காத போக்கு என்றும், இரு நாட்டு உறவுகளை பாதிக்கும் செயல் என்றும் இந்திய தூதரிடம் சீனா தெரிவித்துள்ளதாகவும் சீன ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கான இந்தியத்தூதர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் வருமாறு உத்தரவிடப்பட்டு, சீனாவின் இந்த கண்டனத்தை நேரில் தெரிவித்ததாகவும், சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒருபகுதி என்று சீனா கூறி வருகிறது. இந்திய சீன எல்லைத்தகறாறு காரணமாக இருநாடுகளுக்கும் இடையில் 1962 ஆம் ஆண்டு குறைவான காலம் நீடித்த ஒரு போர் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.