பதான்கோட் தாக்குதலால் இந்தியா-சீனா பேச்சுவார்த்தை பாதிக்குமா? சீனா கருத்து
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலக நாடுகளிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு நேற்று சீனா தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் லி யுசென்ங் செய்தியாளர்களிடம் கூறியபோது, “சீனாவும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. நாங்கள் இந்திய மக்களின் உணர்வுகளையும் கோபங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். தீவிரவாத தாக்குதல் எங்கு நடைபெற்றாலும் அதனை சீனா கடுமையாக கண்டிக்கும்” என்று கூறினார்.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை பாதிக்காது என்று தான் நம்புவதாகவும் சீன தூதர் தெரிவித்துள்ளார்.