சீன பெண்ணுக்கு 9 இன்ச் நீளத்திற்கு இடது காலை வளர்த்து மருத்துவர்கள் சாதனை.

14

சீனாவில் உள்ள ஒரு இளம்பெண், சிறுவயதில் பாக்டீரியாவினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இடது சிறியதாகி பாதிப்பு அடைந்தது. சரியான மருத்துவ சிகிச்சை இல்லாத காரணத்தினால் அவருடைய வலது காலை விட இடது கால் 9 இன்ச் அளவிற்கு சின்னதாக காணப்பட்டது. இதனால் அவரால் மற்றவர்களை போல வேகமாக நடக்கவோ அல்லது ஓடவோ முடியாது.

Xu Juan என்ற அந்த பெண்ணுக்கு கால் சிறிதானது மட்டுமின்றி முழங்கால் இணைப்பும் பலவீனமாக இருந்தால் மிகவும் சிரமப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய முழங்காலில் இருந்து 9 இன்ச் நீளத்திற்கு அவருடைய காலை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

முதல் கட்டமாக அந்த பெண்ணின் காலை 9 இன்ச் நீளத்திற்கு பெரிதாக்குவது அதன் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் முழங்கால் இணைப்பை கீழே கொண்டு வருவது என இரண்டு கட்டமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது Xu Juan மற்றவர்களை போல நன்றாக நேராகவும், நிமிர்ந்தபடியும்  நடந்து செல்கிறார். சீன மருத்துவத்தில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

14a

14b

Leave a Reply