மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீனா சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, ‘சென்னையில் சீன துணைத்தூதரகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இன்று காலை சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ‘நீண்ட காலமாக இந்தியா- சீனா இடையேயான உறவில் சிக்கல் நீடித்து வருகிறது. எல்லையில் அமைதியை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
இருநாடுகளின் வலிமையை உலக நலனுக்காக பயன்படுத்தும் வரலாற்று பொறுப்பு உள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கும் ஆக்கப்பூர்வமான தீர்வு காணப்படும்.
இருநாடுகள் இடையே மாநிலங்கள் அளவிலான உறவுகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். வலிமையை பாதிக்கும் சில அணுகுமுறைகளை சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்திய யாத்திரிகர்கள் கைலாஷ் மானசரோவர் செல்ல நாதுலா பாதை ஜூனில் திறக்கப்படும்.
சென்னையில் சீன துணைத்தூதரகம் அமைக்கப்படும். சீனாவின் சிச்சுவான் மாகாணம் செங்குடுவில் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்படும்.
இவ்வாறு மோடி பேசினார்.