ராஜபக்சே போல ஸ்ரீசேனாவும் எங்களுக்கு ஆதரவு தருவார். சீனா நம்பிக்கை

srilanka and chinaஇலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டது போல புதிய அதிபர் ஸ்ரீசேனாவும் எங்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் முடிவு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லீ கூறியபோது ” இலங்கையின் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிறிசேனாவுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது. மேலும் சீனாவிற்கும் இலங்கைக்கும் நல்ல நட்புறவு இருக்கின்றது. ஆட்சி மாறினாலும், அதிபர் மாறினாலும் அந்த நட்புக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது.

புதிய அதிபராக பதவி ஏற்றிருக்கும் ஸ்ரீசேனா, இலங்கை அரசுக்கும், இலங்கை மக்களுக்கும் தலைமையேற்று நாட்டின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை கொண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

இலங்கையின் புதிய அதிபர் சீனாவுடனான நட்புரீதியான கொள்கைகளை ராஜபக்சே போல் தொடர்ந்து பின்பற்றுவார் என்றும், சீனா தொடர்புடைய திட்டங்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு அளிப்பார் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Leave a Reply