சீனாவில் ஐந்து வயது சிறுமி 15வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலில் இருந்து வெளியே வரமுயன்று தலை மட்டும் ஜன்னல் கம்பியில் சிக்கிக்கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.
சீனாவில் உள்ள ஜாங் குவிங் என்ற மாகாணத்தை சேர்ந்த லீலீ என்ற ஐந்து வயது சிறுமியை அவருடைய பெற்றோர் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் தனிமையில் இருந்த லீலீக்கு போர் அடித்தது. வீட்டின் கதவும் பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக வெளியேற முயன்றார்.
15 வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே செல்ல முயன்ற லீலீயின் உடல்முழுவதும் ஜன்னலுக்கு வெளியே வந்துவிட்டது. ஆனால் தலை மட்டும் ஜன்னல் கம்பியில் சிக்கிக்கொண்டதால் அவர் 15வது மாடியில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார்.
இதை தற்செயலாக பார்த்த பக்கத்துவீட்டினர் உடனடியாக மீட்புப்படையினர்களுக்கு கொடுத்த தகவலை அடுத்து மீட்புப்படையினர் விரைந்து வந்து சிறுமியின் உயிரை காப்பாற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.