பதிலுக்கு பதில்: அமெரிக்க பொருட்களின் வரியை உயர்த்த சீனா அதிரடி முடிவு

பதிலுக்கு பதில்: அமெரிக்க பொருட்களின் வரியை உயர்த்த சீனா அதிரடி முடிவு

“மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (மீண்டும் அமெரிக்காவை பெருமைமிக்கதாக மாற்றுவோம்) என்ற வாக்குறுதியுடன் அதிபரான டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சமீபத்தில் உயர்த்தினார்.

இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி அதிகரித்து அவர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப்போவதாக மிரட்டி வருகிறார்.

டிரம்ப்பின் இந்த திடீர் வரி உயர்வுக்கு சீனா அதிருப்தி தெரிவித்தது. இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்னதாக, அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமையை திருடி போலியாக பொருட்கள் தயாரிப்பதற்கு சீனா உதவி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை உயர்த்துவது குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் மூலம் 30 பில்லியன் முதல் 60 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சீனாவுக்கு இழப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பன்றி இறைச்சி, ஆப்பிள் மற்றும் உலோகப்பொருட்களுக்கு 15 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை வரியை கூட்ட சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வணிக யுத்தத்திற்கு அமெரிக்கா எங்களை தள்ளி விடக்கூடாது என சீனா குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply