டிரைவர் இல்லாமல் இயங்கும் சுரங்க ரயில். சீனாவில் விரைவில் அறிமுகம்

டிரைவர் இல்லாமல் இயங்கும் சுரங்க ரயில். சீனாவில் விரைவில் அறிமுகம்

சீன ரயில்வே துறை புல்லட் ரயில் உள்பட ரயில்வே துறையில் பல புரட்சிகள் செய்து வரும் நிலையில் தற்போது டிரைவர் இல்லாத சுரங்க ரயிலை இயக்கி சாதனை செய்துள்ளது. தானாக இயங்கும் இந்த சுரங்க ரயில் சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் யங்பாங்கில் இருந்து பாங் ஷான் வரை 16.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆளில்லாமல் இயங்கும் வகையில் ரெயில் தண்ட வாளம் அமைக்கப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க சீனாவிலேயே உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுமான பணிகள் இந்த ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிதாக உருவாக்கப்படும் 2 ரெயில் தண்டவாள வழித்தடங்களில் இந்த ஆண்டு இறுதியில் ரெயில்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply