சீனாவிடம் இருந்து இந்திய கடல்பகுதியை பாதுகாக்க இந்திய கப்பல்படை பல்வேறு ரகசிய நடவடிக்கைகளை பல வருடங்களாக எடுத்துக்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாயமான மர்ம விமானத்தை தேடும் காரணத்தை சொல்லி இந்திய கடபகுதிக்குள் நுழைய சீன கப்பல்படை அனுமதி கேட்டுள்ளது. ஆனால் சின கப்பல்படை இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்தால், இந்திய கப்பல் படையின் ராணுவ ரகசியங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், சீனாவுக்கு அனுமதி கொடுக்க இந்தியா தயங்குகிறது.
ஆனால் மலேசியாவும், சீனாவும் தொடர்ந்து வற்புறுத்தினால் இந்தியா அனுமதி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தர்மசங்கடமான சூழ்நிலையில் இந்தியா இருந்து வருகிறது.
மாயமான கப்பலை தேடுவதற்காக அந்தமான் கடல் பகுதியில் அதிநவீன மீட்புக்கப்பல் உள்ளிட்ட 4 சீன போர்க்கப்பல்களை இந்திய கடல்பகுதியில் நுழைய முறைப்படியான அனுமதி கோறும் விண்ணப்பத்தை நேற்று சீனா இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு இந்தியா என்ன பதில் அளிக்கப்போகிறது என்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் ஏதாவது தவறு நடந்துவிட்டால் அது தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்ற கோணத்திலும் மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.