எதிர்ப்புகளை தவிர்க்க கடலில் மிதக்கும் அணுமின் நிலையம். சீனாவின் புதிய திட்டம்

எதிர்ப்புகளை தவிர்க்க கடலில் மிதக்கும் அணுமின் நிலையம். சீனாவின் புதிய திட்டம்
china
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் உள்பட நிலத்தில் அமைக்கப்பட்ட உலகின் பல அணு உலைகளுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இந்த எதிர்ப்புகளை தவிர்க்கும் பொருட்டு சீனா, கடலின் நடுவில் மிதக்கும் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த அணு உலையால் எவ்வித தீங்கும் ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அணுசக்திக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் ஜு டாஷே நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது “சீனாவின் அணுமின் உற்பத்தியை வரும் 2020-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடலில் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இதையொட்டி, கடல் வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள சீனா முடிவு செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ரஷ்யாவில் கடலில் மிதக்கும் அணுமின் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது சீனாவும் மிதக்கும் அணுமின் நிலையத்தை அமைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News: China planning to build floating Nuclear power plant

Leave a Reply