சீனாவில் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க 14 முறை கர்ப்பமான பெண்

சீனாவில் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க 14 முறை கர்ப்பமான பெண்

pregnantஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஒரு பெண், 14 முறை கர்ப்பமாகி சிறை தண்டனையில் இருந்து தப்பித்து வருகிறார். அவரை எப்போது கைது செய்வது என போலீஸார் குழம்பி வருகின்றனர்.

வடமேற்கு சீனாவை சேர்ந்த க்ஸிங்ஜியாங் என்ற மாகாணத்தின் தலைநகரான உரும்கி என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஊழல் வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால்  அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவிக்கவே, அந்த பெண் குழந்தை பெற்றவுடன் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள அந்த பெண் திட்டமிடார்.

அவர் உடனடியாக மருத்துவரிடம் சென்று தனது கர்ப்பத்தை கலைத்தார். சில மாதங்கள் கழித்து மீண்டும் கர்ப்பமுற்றார். போலீஸார் அவரை கைது செய்ய வந்தபோது தனது கர்ப்பத்தை காட்டி சிறை தண்டனையில் இருந்து தப்பினார். இதேபோல் ஒவ்வொரு முறையும் கர்ப்பமாவது, அதன்பின்னர் சில மாதங்கள் கழித்து கருவை கலைப்பது என பத்து வருடங்கள் சிறை தண்டனையில் இருந்து தப்பித்து வருகிறார். தற்போது 14வது முறையாக மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இவரை எப்போது கைது செய்வது என போலீஸார் திணறி வருகின்றனர்.

Leave a Reply