இந்தியர்களுக்கு தரப்பட்டிருந்த சலுகையை திடீரென ரத்து செய்த சீனா
முன்பு இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஹாங்காங் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியாகவும் உள்ளது. இந்நிலையில் இதுவரை இந்தியர்கள் ‘விசா’ எதுவும் இன்றி அதாவது இலவச ‘விசா’வில் ஹாங்காங் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஹாங்காங் செல்லும் இந்தியர்கள் அங்கு எந்தவித விசாவும் இல்லாமல் 14 நாட்கள் தங்க முடியும்.
ஆனால் இச்சலுகை திடீரென தற்போது ரத்து செய்யப்பட்டது. இதனால் இனிமேல் ஹாங்காங் செல்லும் இந்தியர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து ‘விசா’ பெற வேண்டும்.
இந்த நடைமுறை வரும் ஜனவரி 23-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்குரிய முன் அனுமதி பதிவு செய்ய ஆன்லைன் சேவை இப்போதே தொடங்கப்பட்டுவிட்டது.
இந்தியாவில் இருந்து ஹாங்காங் வந்து சென்று அங்கேயே தங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.