இந்திய எல்லையில் சீனா படைகள் குவிப்பா? அதிர்ச்சி தகவல்

இந்திய எல்லையில் சீனா படைகள் குவிப்பா? அதிர்ச்சி தகவல்

india chinaஇந்தியாவின் எல்லையில் அதிகளவிலான படைகளை சீனா குவித்து வருவதாகவும், இதன் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து முடிவுக்கு வருவது கடினமான ஒன்றாக இருப்பதாகவும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ராணுவ உதவி மந்திரி ஆபிரகாம் டென்மார்க் கூறியுள்ள தகவல் இந்தியா உள்பட ஆசிய நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நேற்று அமெரிக்கா நாட்டின் பாராளுமன்றத்தில் ‘2016-ம் ஆண்டுக்கான சீனாவின் ராணுவம், பாதுகாப்பு வளர்ச்சி அறிக்கை’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய ஆபிரகாம் டென்மார்க் இந்த அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டர் இதுகுறித்து கூறியபோது ‘சமீபத்தில் நான் இந்திய சுற்றுப்பயணம் செய்தது நல்ல பலனை அளித்துள்ளது. இந்தியாவுடன் எங்கள் இரு தரப்பு உறவை மேம்படுத்தப்போகிறோம். சீனாவை முன்னிட்டு அல்ல. இந்தியா ஒரு முக்கியமான நாடு என்பதின் அடிப்படையில்தான். இந்தியா மீதான மதிப்பீட்டை புரிந்துகொண்டவர்களாக அந்த நாட்டுடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்” என பதில் அளித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது தளங்களில், அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் சீனா படைகளை குவித்துள்ளதாக கூறி, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Leave a Reply