வடகொரியா நாட்டின் மீது பொருளாதார தடையா? சீனா எதிர்ப்பு

வடகொரியா நாட்டின் மீது பொருளாதார தடையா? சீனா எதிர்ப்பு

north koreaஉலக நாடுகள் மற்றும் ஐ.நாவின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் அவ்வப்போது அணுகுண்டு சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஐ.நாவை வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக்கூடாது என்றும் அதற்குப் பதிலாக அந்நாட்டுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் சீனா கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியதை சீனா கடுமையாக கண்டிக்கிறது. அதே நேரம் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிப்பதால் எவ்வித பயனும் இல்லை. அதற்குப் பதிலாக வடகொரியாவுடன் ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம்’ என்று கூறியுள்ளார்.

இதனிடையே வடகொரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய வெளியு றவு அமைச்சர்கள் வரும் 18-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது வடகொரியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply