உயிர் போகும் நிலையில் படுத்த படுக்கையில் இருந்து கொண்டே பாடம் நடத்திய பேராசிரியர்.

[carousel ids=”65047,65048,65049″]

சீனாவில் உள்ள ஒரு ஆசிரியர் படுத்த படுக்கையாக உயிருக்கு போராடிய நிலையிலும் தனது மாணவர்களை மருத்துவமனைக்கே அழைத்து கடைசி பாடத்தை நடத்தியதாக நெஞ்சை உருக்கும் தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

சீனாவில் உள்ள சிச்சுவான் நார்மல் பல்கலைக்கழகத்தில் ( Sichuan Normal University) பேராசிரியராக பணிபுரியும் 34 வயது லியூ செங்பிங் ( Liu Shengping) என்பவர் லிவர் நோயினால் பாதிக்கப்பட்டார். லிவர் மாற்று சிகிச்சை செய்ய வசதியில்லாததால், அவர் தன்னுடைய நோய்க்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வில்லை. இதனால் அவரது லிவர் முற்றிலும் பாதிக்கப்பட்டு தற்போது உயிருக்கு போராடியவாறு சீன மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.

தன்னுடைய உயிர் எந்நேரமும் பிரிய வாய்ப்பு இருப்பதாக டாக்டர்களின் மூலம் தெரிந்து கொண்ட செங்பிங், கடைசியாக தன்னுடைய மாணவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு வரவழைத்து தான் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்கள் அனைத்தையும் அவர்களுக்கு படுக்கையில் இருந்தவாறே சொல்லிக்கொடுத்தார். இறுதியில் சீன தேசிய கீதத்துடன் வகுப்பு முடிவடைந்தது. இந்த வகுப்பில் மாணவர்கள் கண்ணீருடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் போகும் நிலையிலும் தனது மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.

Leave a Reply