7000 மைல்கள் கடந்த சென்று தாக்கும் ஏவுகணை சோதனை. சீனா அதிரடி
அமெரிக்கா-சீனா ஆகிய நாடுகள் கடந்த சில வருடங்களாக கருத்துவேறுபாடுகளுடன் இருந்து வருகிறது. மூன்றாம் உலகப்போர் என்ற ஒன்று வந்தால் அதற்கு நிச்சயம் இந்த இரு நாடுகள்தான் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனா சமீபத்தில் 7000 மைல்கள் கடந்து சென்று தாக்கும் ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
மிகச்சரியா அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள தூரம் 7000 மைல்கள் என்பதால் இந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவை பயமுறுத்துவதாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும் சீனாவின் பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதால் அந்நாடு அமெரிக்காவுக்கு எதிரான போரில் தயாராகி வருவதாகவே உலக நாடுகள் கணிக்கின்றன.
சீனா சோதனை செய்துள்ள இந்த ஏவுகணை சுமார் பத்து அணுகுண்டுகளை சுமந்து சென்று 7000 மைல்களையும் தாண்டி இலக்கை சரியாக அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.