2வது குழந்தை பெற்றுக்கொள்ளலாம். புத்தாண்டு முதல் அனுமதி அளித்தது சீன அரசு

2வது குழந்தை பெற்றுக்கொள்ளலாம். புத்தாண்டு முதல் அனுமதி அளித்தது சீன அரசு

china140 கோடி என உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் நேற்று முதல் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கபட்டுள்ளது. இதனால் சீனமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க ஒரு குழந்தை மட்டுமே ஒரு தம்பதியினர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கடந்த சில ஆண்டுகளாக சீனா அமல்படுத்தி வந்தது. ஆனால் இதனால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதோடு வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் பாலியல் வன்முறை குற்றமும் பெருகியதாக ஒரு கருத்து கணிப்பு தெரிவித்தது.

இதையடுத்து ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்தி 2 குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு சமூக ஆர்வல அமைப்புகள் சிபாரிசு செய்தது. ஆளும் கம்யூனிஸ்டு உயர் மட்டக்குழு 2 குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கலாம் என்று கடந்த அக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்தது.

இது குறித்த சட்டம் தேசிய பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேறியது. அதில் ஜனவரி 1–ந் தேதி 2 குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஒரு குழந்தை திட்டம் முடிவுக்கு வந்தது. புத்தாண்டு தினமான நேற்று முதல் 2 குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தை சீன தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

Chennai Today News:China to end one-child policy and allow two

Leave a Reply