மணிக்கு 400 கிமீ வேக ரயில். சீனாவின் மிகப்பெரிய சாதனை

மணிக்கு 400 கிமீ வேக ரயில். சீனாவின் மிகப்பெரிய சாதனை

trainஏற்கனவே புல்லட் ரயில்கள் என்று கூறப்படும் அதிவேக ரயில்கள் ஒருசில நாடுகளில் இயங்கி வரும் நிலையில் மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும்ன் ரயில் ஒன்றின் சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் இந்த ரயில் பயணிகளுக்கான சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய சீனாவில் உள்ள செங்சு நகர் முதல் கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துடன் இணைக்க முடிவு செய்த சீனா, இதற்காக அதிவேக ரெயில் ஒன்றினை தயாரிக்கும் பணியில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மணிக்கு 400கிமீ வேகத்தில் செல்லும் ரயில் தயாராகி அதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த ரயிலுக்காக பிரத்யேகமாக சுமார் 16 ஆயிரம் கிமீ நீளம் கொண்ட தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களை சீனாவில் இயக்குவது மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் முதல்கட்டமாக இந்த ரயில் சென்னை – டெல்லி இடையே ரெயில் தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply