புல்லட் ரயில் வேகத்தை குறைக்க சீன ரயில்வே முடிவு

புல்லட் ரயில் வேகத்தை குறைக்க சீன ரயில்வே முடிவு

புல்லட் ரயில் என்று கூறப்படும் அதிவேக ரயில்களை இயக்கி வரும் சீனா தற்போது அதன் வேகத்தை மணிக்கு 350 கி.மீ. என மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுவரை சீனாவில் மணிக்கு 400 கிமீ என்ற வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த புல்லட் ரயில்கள் தற்போது வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டுகளில் புல்லட் ரயில்களால் ஏற்படும் விபத்துக்களும், அதனால் ஏற்படும் அதிகப்படியான மரணங்களுமே காரணம்

கடந்த 2011ம் ஆண்டு கிழக்கு ஜேஜியாங் பகுதியில் நிகழ்ந்த ஒரு ரெயில் விபத்தில் 30க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். இந்த விபத்திற்கு ரெயில் அதிக வேகத்தில் இயக்கப்படுவதே காரணம் என கண்டறிப்பட்டதையடுத்து சீன ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.

எனவே வரும் செப்டம்பர் மாதம் முதல் பீஜிங் – சாங்காய் இடையே இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 

Leave a Reply