இந்திய எல்லையில் குழாய் பதித்த ஊழியர்களை விரட்டியடித்த சீன ராணுவம். பெரும் பரபரப்பு.

india, china borderசீன பிரதமர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய வரவுள்ள நிலையில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் என்ற பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் சிலர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென அங்கு அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்த பகுதிகளில் குழாய்களை பதிக்க கூடாது என்று மிரட்டியதால்  இந்திய ஊழியர்கள் குழாய்களை பதிக்கும் பணியில் பாதியிலேயே விட்டுவிட்டு திரும்பி விட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் உடனடியாக இந்திய-திபெத் எல்லை காவல் படையைச் சேர்ந்த 70 பேர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.கடந்த மாதம் சீன ராணுவம் இந்திய எல்லைப்பகுதிக்குள் சுமார் 25 கி.மீட்டர் வந்த தனது அத்துமீறலை நடத்தியது. இந்த ஆண்டு 133 முறை சீன ராணுவம் அத்துமீறியுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் அதாவது வரும் 17ஆம் தேதி இந்தியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பாணம் செய்ய வரும் சீனப்பிரதமரை பாரத பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி, சீன பிரதமரிடம் விரிவான ஆலோசனை செய்வார் என எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply