சீனாவில் பால்விலை கடும் வீழ்ச்சி. பசுமாடுகளை கொன்று விவசாயிகள் போராட்டம்.

cowsதமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பால் விலையை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியது. ஆனால் சீனாவில் பால் விலை இதற்கு நேர்மாறாக உள்ளது. அங்கு பால்விலை மிகக்கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து விவசாயிகள் பசுக்களை கொன்று வருவதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவருகின்றன.

சீனாவில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அங்கு பால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பால்பண்ணைகளில் உற்பத்தியாகும் பால் கீழே கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பால் விலையை உயர்த்தி தருமாறு விவசாயிகள் சீன அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை  அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அதிர்ச்சியான போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதன்படி பால்தரும் மாடுகளை கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து வருகின்றனர். பால் விலையை அரசு உயர்த்தாவிட்டால் இனி வரும் காலங்களில் அதிகளவு மாடுகளை இறைச்சிகாக கொல்ல இருப்பதாக அவர்கள் பயமுறுத்தியுள்ளனர்.

மேலும் உற்பத்தியாகும் பால்களையும் தரையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சீன அரசு உடனடியாக இந்த விஷயம் குறித்து நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply