சீனாவில் வரலாறு காணாத வகையில் பொருளாதார வீழ்ச்சி.

சீனாவில் வரலாறு காணாத வகையில் பொருளாதார வீழ்ச்சி.
china
சீனாவில் பொருளாதாரம் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து வருவதால் சீனப்பங்கு சந்தை பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. சீனாவின் இந்த பொருளாதார வீழ்ச்சி இந்தியா உள்பட ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகளை பெருமளவு பாதித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவை சீனப் பொருளாதாரம் சந்தித்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மக்கள் தொகையில் உலகின் முதலிடத்திலும், பொருளாதாரத்தில் உலகின் இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.3 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு 6.9 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளி விவரங்கள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவில் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்திருப்பதால் உலகம் முழுவதும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply