சீன ராணுவத்தின் பிரமாண்ட அணிவகுப்பு. உலகமே வியந்து பார்த்த வீடியோவின் தொகுப்பு
உலகின் மிகப்பெரிய ராணுவத்தை தனது கையில் வைத்திருக்கும் சீனா 2ஆம் உலகப்போரில் ஜப்பானை வெற்றி பெற்றதன் 70 ஆம் ஆண்டு விழாவை தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் நேற்று மிகச்சிறப்பாக கொண்டாடியது. அப்போது சீன ராணுவம் நடத்திய பிரமாண்ட அணிவகுப்பு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
துப்பாக்கி ஏந்திய 12 ஆயிரம் வீரர்களின் அணிவகுப்பு, நூற்றுக்கணக்கில் நவீன ரக பீரங்கிகள், கவச வாகனங்கள், சிறிய மற்றும் பெரிய ஏவுகணைகள்,போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த அணிவகுப்பு, சீன மக்களை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வாழும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. வானில் பலவண்ண பொடிகளைத் தூவிய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானத்தையே வண்ணமயமாக்கின.
ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் நடந்த இந்த பிரமாண்ட அணிவகுப்பின் முடிவில், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான புறாக்கள், வண்ண வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த நிகழ்வில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கிமூன் உள்ளிட்ட தலைவர்களும்,மூத்த ராணுவ வீரர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பின் வீடியோ தொகுப்பு யூ டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை ஒரே நாளில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=sCuCjgXaxRA