பின் நம்பர் தேவையில்லை. முகம் காட்டினால் பணம் கொடுக்கும் ஏடிஎம் மிஷின்

VID: Facial Recognition ATMs to Curb ATM -related Crimesஇந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் ஏடிஎம் கார்டு உபயோகிப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பின் நம்பர்களை பயன்படுத்தியே ஏடிஎம் மிஷினில் பணம் எடுத்து வருகின்றனர். ஆனால் சீனாவில் முதன்முறையாக பின் நம்பர்களுக்கு பதில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவரின் முகத்தை அடையாளம் கண்டு பணத்தை டெலிவரி செய்யும் ஏடிஎம் மிஷின் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகிலேயே முதல்முறையாக இம்முறையில் உருவாகியிருக்கும் ஏடிஎம் மிஷின் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவருடைய பின் நம்பரும், ஏடிஎம் கார்டும் இருந்தால் போதும் மற்றவர்களும் அவர்களுடைய அக்கவுண்டில் இருந்து பணம் பெற வழிவகை இருந்தது. ஆனால் இந்த முறைப்படி கண்டிப்பாக வங்கியில் அக்கவுண்ட் துவங்கும்போது கொடுத்த புகைப்படத்திற்குரிய ஒரிஜினல் முகம் தெரிந்தால் மட்டுமே பணம் வெளியே வரும். இந்த புதிய முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

சீனாவில் உள்ள Tsinghua University மற்றும் Hangzhou-based Tzekwan Technology ஆகியவைகள் இணைந்து தயாரித்துள்ள இந்த புதிய நடைமுறைக்கு சீன மக்களிடையே பெரும் ஆதரவு குவிந்துள்ளது. இனிமேல் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் கூட நமது பணத்திற்கு பாதுகாப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply