70வது திருமண நாளை வித்தியாசமாக கொண்டாடிய சீன தம்பதி.
[carousel ids=”77135,77136,77137,77138,77139,77140,77141,77142,77143,77144,77145″]
சீனாவில் கடந்த 70ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதி, தங்களது திருமணம் நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். 70 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டவுடன் புகைப்படம் எடுத்த அதே இடத்திற்கு வந்து அதே உடையுடன் மீண்டும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
1945-ம் ஆண்டு சீனாவில் உள்ள சாங்கிங் நகரத்தில் உள்ள ஒரு பூங்கா அருகே காவ் யூஹுவா மற்றும் வேங் தேயி தம்பதியின் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் அருகில் இருந்த பூங்காவில் இருவரும் இணைந்து புகைபப்டம் எடுத்து கொண்டனர்.
தற்போது 98 வயதாகும் இந்த தம்பதியினர் மீண்டும் அதே இடத்திற்கு தங்கள் 70வது திருமண தினத்தில் வந்து அதே உடையுடன், அதே இடத்தில் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
English Summary: Touching images show an elderly Chinese couple recreate their wedding photos at the place where they were married 70 years ago