96 வருடங்களாக இணைபிரியாமல் வாழும் சீன தம்பதிகள்

96 வருடங்களாக இணைபிரியாமல் வாழும் சீன தம்பதிகள்

china5தற்போதைய நாகரீகமான கம்ப்யூட்டர் உலகில் திருமணம் என்பது தற்போது விளையாட்டுக்கள் போல மாறி விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. சிறுசிறு காரணங்களுக்கெல்லாம் விவாகரத்து செய்யும் தம்பதியை நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் சீனாவில் ஒரு தம்பதியினர் 96 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்த 96 வருடங்களில் ஒருநாள் கூட ஒருவரை ஒருவர் பிரியாமல் தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு வயதில் பெற்றோர்களை இழந்த Wei Basao என்ற சிறுமியை அவரது உறவினர்களில் ஒருவர் தத்தெடுத்து தங்கள் வீட்டு பிள்ளை ஒருவருக்கே மணமுடித்து கொடுத்தனர். மணமகனுக்கு ஐந்து வயதும், Wei Basaoக்கு ஆறு வயதும் இருந்தபோது இந்த திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிக்கு திருமணமாகி 96 வருடங்கள் பூர்த்தி ஆகிவிட்டது. குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் இந்த தம்பதி நிம்மதியாக இன்றும் ஆரோக்கியமாக தங்கள் வேலைகளே தாங்களே செய்து வருகின்றனர்.

இந்த தம்பதியினர் குறித்து சீன ஊடகம் ஒன்று டாக்குமெண்ட்ரி ஒன்றை எடுத்துள்ளது. கணவருக்கு 103 வயதும், மனைவிக்கு 102 வயதும் ஆகி வரும் நிலையில் சாகும் வரை இருவரும் ஒன்றாகவே வாழ்வோம் என்றும் மரணம் கூட தங்களை பிரிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

chinachina1 china2 china3 china4 china5 china6 china7

Leave a Reply