நடுக்கடலில் சரக்கு கப்பலுடன் சீன மீன்பிடி கப்பல் மோதல். 17 மீனவர்கள் மாயம்

நடுக்கடலில் சரக்கு கப்பலுடன் சீன மீன்பிடி கப்பல் மோதல். 17 மீனவர்கள் மாயம்
boat
ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே சர்ச்சைக்குரிய தீவாக விளங்கி வரும் தென்சீன கடல் பகுதியில் சரக்கு கப்பல் ஒன்றுடன் மீன்பிடி படகு மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் மீன்பிடி படகில் இருந்த 17 பேர் கதி என்னவாயிற்று? என்பது தெரியாத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் சீனாவைச் சேர்ந்த கடலோரக் காவல் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு சீன நேரப்படி சுமார் 10.30 மணியளவில் வெளிநாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றுடன் சீனாவைச் சேர்ந்த பதிவு எண்: 58398 கொண்ட மீன்பிடி படகு நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் படகில் இருந்த 19 பேர் கடலில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்துவந்த கடலோரக் காவல் படையினர் இதுவரை இரண்டு மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளதாகவும், மீதியுள்ள 17 பேர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply