சினாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு நான்கு சிறுநீரகங்கள்

சினாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு நான்கு சிறுநீரகங்கள்
kidney
பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் இரண்டு சிறுநீரகங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சீனாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு அதிசயமாக நான்கு சிறுநீரகங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கூடுதல் சிறுநீரகங்களே அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறப்பட்டதால் தற்போது டாக்டர்கள் அந்த சிறுநீரகங்களை அகற்றியுள்ளனர்.

சீனாவை சேர்ந்த சியோலின் என்ற பெண்ணுக்கு பிறவியிலேயே நான்கு சிறுநீரகங்கள் இருந்துள்ளன. ஆனால் இதுதெரியாமலே வளர்ந்த அந்த பெண் சமீபத்தில் வயிறு வலி காரணமாக ஸ்கேன் எடுத்தபோது அவருக்கு நான்கு சிறுநீரகங்கள் இருப்பது தெரிய வந்தது.

இந்த கூடுதல் சிறுநீரகங்களால்தான் அவருக்கு தொடர்ச்சியாக வயிற்று வலி இருந்ததாகவும், இதை அகற்றாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்ததாலும் உடனடியாக மருத்துவர்கள் இரண்டு சிறுநீரகங்களை அகற்றினர். தற்போது சியோலின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply