ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்தியா வரைபடத்தை வெளியிட்ட சீனா

ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்தியா வரைபடத்தை வெளியிட்ட சீனா

கனடாவில் விற்கும் சீன தயாரிப்பு உலக உருண்டையில் இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் தனித்து பிரித்து காட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த சந்தீப் தேஷ்வால் , டோரன்டோவில் உள்ள ஒரு கடைக்கு சென்று தனது 6 வயது மகள் அஸ்மிதாவுக்கு உலக உருண்டை வாங்கி வந்தார். அது சீனாவால் தயாரிக்கப்பட்டது. வீட்டுக்கு வந்தவர் தனது மகளிடம் கொடுத்தார்.

அவரது மகளும் அந்த உலக உருண்டையில் கனடா, இந்தியா எங்கு இருக்கிறது என்று தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது பார்த்தபோது இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் தனித்து காட்டப்படுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

.இது குறித்து கடை உரிமையாளரிடம் புகார் கொடுத்த சந்தீப் கூறுகையில், ”எனது மகளிடம் இந்தியாவின் ஒரு பகுதிதான் ஜம்மு காஷ்மீர் என்பதை நான் வலியுறுத்திக் கூறாமல் விட்டால், அவள் மனதில் இந்தியாவைப் பற்றிய வேறு புகைப்படம் தான் இருக்கும். இதனால், எதிர்கால சந்ததியினருக்கு இந்தியாவைப் பற்றி வேறு மாதிரியான எண்ணம்தான் இருக்கும்” என்கிறார்.

Leave a Reply