உலகிலேயே மிக அதிகமான மக்கள்தொகையை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் இன்னும் நாளுக்குநாள் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் சீனத்தலைநகர் பீஜிங் நகரில் மட்டுமே 2 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் புதியதாக ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.
இங்கு வாழும் மனிதர்கள் இறந்தால் அவர்களை புதைப்பதற்கு 33 சுடுகாடுகள் மட்டுமே உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான இறந்தவர்களின் உடல்கள் இந்த சுடுகாடுகளுக்கு வருவதால் இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்கான இட நெருக்கடியும், அடக்கம் செய்வதற்கான செலவுகள், தாறுமாறாக உயர்ந்து விட்டன. கிராமங்களில் ரூ.2 லட்சத்துக்கு மேலும், நகரங்களில் ரூ.8 லட்சத்துக்கு மேலும் ஒரு உடலை அடக்கம் செய்ய செலவு ஆகிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, கடலில் உடல்களை அடக்கம் செய்யும் திட்டத்தை சீனா புதியதாக அறிமுகம் செய்துள்ளது. கடலில் அடக்கம் செய்தால், வழக்கமான இறுதிச்சடங்கு செலவுக்கு வழங்கும் தொகையைப் போல இருமடங்கு தொகையை வழங்குவதாகவும் சீனா அறிவித்துள்ளது. அதாவது, ரூ.20 ஆயிரத்துக்கு பதிலாக, ரூ.40 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், கடலில் அடக்கம் செய்வதாக இருந்தால், இறந்தவரின் உடலுடன் 6 பேர்வரை இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்கு சென்று வரலாம் என்று சீன அரசு சலுகை அளித்துள்ளதால் இனிவரும் காலங்களில் கடலில் மிக அதிகமாக இறந்த உடல்கள் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.