தினமும் 2.5 கிலோ மிளகாய் சாப்பிடும் அதிசய மனிதன்
[carousel ids=”73790,73791,73792,73793,73794″]
ஓரே ஒரு மிளகாயை கடித்துவிட்டாலே ஆ..ஊ… என்று கதறும் நம்மவர்கள் மத்தியில் சீனாவை சேர்ந்த ஒரு நபர் தினமும் 2.5 கிலோ மிளகாயை உணவாக உட்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சீனாவை சேர்ந்த லீ யோங்ஜி என்ற நபர் தினமும் உணவுடன் சேர்த்து 2.5 மிளகாயையும் சேர்த்து சாப்பிட்டு வருகிறார். காலையிலும், மாலையும் அவருக்கு சிநாக்ஸ் மிளகாய்தான் என்று கூறப்படுகிறது.
இவருக்கு அந்த பகுதியினர் ‘கிங் ஆஃப் சில்லீஸ்’ என்ற பெயரையும் வைத்துள்ளனர். 48 வயதான லீ, சிறுவயது முதலே மிளகாயை உணவாக சாப்பிட்டு வருவதாகவும், அவருடைய நாக்கு மிளகாயின் காரத்தால் எவ்வித பாதிப்பு இன்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிளகாயின் காரம் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் அதற்காக எனக்கு சூப்பர் பவர் இருப்பதாக தான் கருதவில்லை என்றும், மிளகாயுடன் உணவை சேர்த்து சாப்பிட்டால் தனக்கு ருசியாக தெரிகிறது என்றும் லீ ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.